சோழ மன்னன் பராந்தகனின் வாரிசுகளைச் சுற்றியே அமைந்த இப்புதினம் அரசாங்க விளையாட்டுகளால் வாரிசுகள் அலைக்கழிக்கப்படுவதும், மதியுள்ளவன் அரியணையில் அமர வகுக்கும் வியூகங்களும், வெற்றி பெற வேண்டுமானால் எந்தக் கொடும் செயல்களையும் செய்யத் தயங்காகத் திட மனதும் அதற்கான திட்டமிடலையும் விவரிக்கிறது. முடிவில் அனைத்து மனிதர்களும் மண்ணில் தான் விழப்போகிறோம் என்று தெரிந்தாலும் அடுத்தவனை அழித்துத் தன்னை மேலுயர்த்திக் கொள்வதில் போடும் சண்டைகளால் அவர்களுடன் நெறுமுறைகளைப் பின்பற்றி வாழும் மனிதர்களே பெரும் துன்பத்திற்கு ஆளாகுகின்றனர். மக்களின் தலைவனாக இருப்பவன் தன் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் பக்கம் சாயாமல் பொதுவின் பக்கம் நின்றாலே மக்களின் மன சிம்மாசனத்தில் அமரலாம்.தலைவனின் ஒழுக்கம் தடுமாறும் போது அக்கூட்டுசமூகத்தையே குதறிப் போட்டுவிடுகிறது, அது தான் பல சாம்ராஜ்ஜியங்களின் வீழ்ச்சியை எடுத்துரைக்கிறது. சாம்ராஜ்ஜியங்களின் வீழ்ச்சியும் எழுச்சியும் வீரத்தால் நிர்மானிக்கப்படுகிறது என்றாலும் அதில் பெண்களின் கண்ணீரே பெரிதும் அடங்கியுள்ளது.
SKU-P1A1HL6UEQSAuthor:Kalachakram Narasimha
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|