இந்தப் புத்தகத்தில் சில இடங்களில்... அல்ல அல்ல, நிறைய இடங்களில் பெண்ணை உயர்த்திப் பிடிக்கவே செய்திருக்கிறேன். பெண்ணைப் பற்றிய குறைந்த பட்ச புரிதலே இல்லாத தேசத்தில் அப்படி ஒரு படி உயரத்துவது அவசியம் என்று கருதுகிறேன். பெண்ணென்பவள் உடலால் ஆனவள் என்றும் அவளின் உடல் ஆணுக்கான கனவு என்றும் பெண்ணை உடலால் கீழ்மை செய்யமுடியுமெனவும் ஊறிப்போன மனங்கள் நிறைந்த சமூகத்தில் அவளை எந்த நோக்கங்களும் இன்றி இயல்பாக அணுகு என்று சொல்லுவதே - பெண்ணைப் போற்றி புகழ்வதென்று புரிந்துகொள்ளப்படுகிறது. பெண்ணிடம், எப்போதாவது உன்னை நான் தப்பா ஒரு பார்வை பார்த்திருப்பேனா? என்று ஆதங்கம் பொங்கக் கேட்பதே ஒருவகையில் நான் இயல்புக்கு மாறாக உன்னிடம் நடந்துகொண்டு வந்திருக்கிறேன் என்னும் சுயதம்பட்டத்தின் வெளிப்பாடு தான். இயல்பென்பது அவளை சகஉயிராக பார்க்கும் பார்வை மட்டும்தான். அதில் சிறப்பித்துக் கூறவோ பெருமைகொள்ளவோ எதுவுமே இல்லை. ஆனால் அதுவே இங்கு கர்வமாக இருக்கிறது என்றால் இன்னும் அவளை இயல்பாக அணுகத்தெரியவில்லை என்றுதானே அர்த்தம்! புரிதலின் பாதையில் கடக்கவேண்டிய தொலைவு நிறைய இருக்கிறது. -யாத்திரி(கார்த்திக்)
SKU-0O1DQE68HFMAuthor:Yaathiri
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|