தமிழில் சிறுவருக்கான சாகச,ஃபேன்டஸி நாவல்கள்,எழுதிப் பார்க்க வேண்டிய நிலையிலேயே உள்ளன.இது எழுதிக் காட்டப்பட்டிருக்கும் நாவல்.
வேறோர் உலகிற்குள் உங்களை இழுத்துச் செல்லும் அங்கே பயங்கர ஜந்துக்கள் ,விபரீதச் சம்பவங்கள்,அலாதியான கற்பனைகள் மட்டுமல்ல,புதிய புதிய தமிழ்ச் சொற்கள்,கலாசாரங்கள் ஆகியவையும் எதிர்ப்படும்.
வாசிக்கும் சிறுவரின் கற்பனைத் திறன்,சிறகு இல்லாமலேயே பறக்கும்.
நீங்கள் ,குழந்தைக்கு வாசித்துச் சொல்பவராக இருந்தால் கதைக்கு இடையில் கதைகளாக கற்பனை உலகம் விரியும், நீங்களே கதாசிரியர் ஆகிவிடலாம்