டெல்லியில் சிபிஐ டைரக்டர் ஒருவர் கொல்லப்படும் அதே நேரத்தில் இமயமலையில் உள்ள ஒரு புத்த விஹார வாசலில் குண்டடிபட்ட நிலையில் ஒரு இளைஞன் சுயநினைவற்றுக் கிடக்கிறான். சில அசாதாரண சக்திகள் இருப்பதால் அமானுஷ்யன் என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்ட அவனைக் கொல்ல தீவிரவாதிகள், போலீசார், சிபிஐ என முத்தரப்பும் முனைகிற்அது. தான் யார், எதற்காக இத்தனை பேர் தன்னைக் கொல்ல முயற்சிக்கிறார்கள் என்று அவன் அறியும் முயற்சியில் ஆரம்பிக்கிறது கதைக்களம். அமானுஷ்யன் யார், அவனுக்கும் கொல்லப்பட்ட சிபிஐ டைரக்டருக்கும் என்ன தொடர்பு, ஏன் அவனை எதிரிகள் கொல்லத் துடிக்கிறார்கள், இறுதியில் என்ன ஆகிறது என்ற பரபரப்பான கேள்விகளுக்கு விடையைப் பல எதிர்பாராத திருப்பங்களுடனும், மர்ம முடிச்சுகளுடனும் விறுவிறுப்பாகச் சொல்கிறது இந்த நாவல். காதல், ஆன்மீகம், அழகிய மனித உணர்வுகள், அரசியல் என எல்லாம் கலந்த இந்த நாவலைப் படிப்பவர் மனதில் நிரந்தரமாகத் தங்கி விடுவான் அமானுஷ்யன்!
SKU-X4DKXIDHOWBAuthor:N. Ganesan
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|