சமீபத்தில் வாசித்த சிறுகதைத் தொகுப்புகளில் என்னை பாதித்த சிறுகதைகள் கொண்ட தொகுப்பாக அழகிய பெரியவனின் "அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்" தொகுப்பு அமைந்திருந்தது. அழகிய பெரியவனின் கவிதைகள் சமூகத்தை அழகியலுடனும், வீரியமிக்க சொல்லோடு செயல்படும் கவிதைத் தன்மையில் அமைந்திருப்பதை கண்டிருக்கிறேன். அவரது சிறுகதைகள் மொழி வழியாக எனக்கு அதிக நெருக்கத்தோடு அமைந்திருந்தது. அகத்திலும், புறத்திலும் கூட என்றும் சொல்லலாம். இத்தொகுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சிறுகதைகள் தனித்தன்மையோடும், ஒவ்வொரு முறையும் வாசிக்கிற போதும் குத்தீட்டி கொண்டு குத்துவதைப் போல ஏதோவொன்று குத்திக் கொண்டே, யாரோ ஒருவரையோ அல்லது சமகாலத்தில் நாம் சந்தித்து வருகிற சமூகம் குறித்தான நாம் கொண்டிருக்கும் உளவியல் பிரச்சனைகள் குறித்தோ உள்வயமான கேள்வி யொன்றை அடுக்கிக் கொண்டே போவதை உணர முடிந்தது.
SKU-UFTMXV0SRRKAuthor:அழகிய பெரியவன் (Azhagiya Periyavan)
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|