இந்த நாவலில் வரும் ‘அம்னி’ என்பது ஒரு பெண் புலி. ‘அம்மணி’ என்று செல்லமாய் பாரஸ்ட் ஆபீசர் மாணிக்கம் கூப்பிட ஆரம்பிக்க, அதுவே மருவி ‘அம்னி’ என்று ஆகி விட்டது. அந்த புலி ஒரு மேன் ஈட்டர். அது ஏன் மேன் ஈட்டர் ஆனது என்பதை விவாதிக்கும் இந்த நாவல், அதனுடன் சேர்த்து விவாதிக்கும் மற்ற அம்சங்கள்:
1. சிவன் கோயில் சொத்துக்களை அபகரித்து வைத்து இருக்கும் கோயில் தர்மகர்த்தா சொக்கலிங்கத்தை பழி வாங்க சிவனடியார் என்ன செய்தார்.
2. மலைக் கிராமத்தில் ஒரு நீர் மின்சார திட்டம். அணை உடைந்து போகிறது. அணை உடைவதற்கு, முதல் நாள் இரண்டு குழந்தைகள், (ஒரு ஆண் குழந்தை ஒரு பெண் குழந்தை) அந்த மலைக் கிராமத்தில் பிறக்கிறது. அந்த இரண்டு குழந்தைகளும் வளர்ந்து கல்யாண வயது அடையும் போது, அந்த ஜோடிக்கு, கல்யாணம் செய்து வைக்க முடிவு செய்தவர்கள், அடுத்த நாள், அணை உடைந்து போன பிறகு அந்த குழந்தைகள் பிறந்த நேரம் சரி இல்லை என்று முடிவு செய்து கள்ளிப் பால் ஊற்றிக் கொல்ல முடிவு செய்கிறார்கள். அந்த குழந்தைகள் என்ன ஆயிற்று. பிறந்தவுடன் முடிவு செய்தது போல், அந்த ஜோடி கல்யாணம் செய்து கொண்டார்களா..