எனக்கு மர்ம நாவல்கள் படிப்பதில் கனமான நாவல்கள் படிப்பதிலே போல ஈடுபாடு உண்டு. ஓரளவுக்கு மர்ம நாவல்களையும் இலக்கியத் தரமுள்ளதாகச் சமீப காலத்தில் ஃபிரெஞ்சு நாவலாசிரியர் ஜியார்ஜஸ் ஸிமனான் என்பவர் பண்ணுகியார் என்பதைக் கவனித்த போது ஏன் அம்மாதிரிச் சில நாவல்கள் எழுதக் கூடாது என்று தோன்றிற்று. நான் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்தே மர்ம நாவல்கள் எழுதி வந்திருக்கிறேன். சக்தி விலாசம், ஆயுள் தண்டனை, கந்தர்வ லோகத்தில் கொலை என்று பல தொடர்கதைகளாகப் பல பத்திரிகைகளில் வெளிவந்த பின் சிதம்பரத்தில் என் தகப்பனார் கண்முன் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து அதற்குக் கண், காது, மூக்கு, கால், மனம், காலம் என்று எல்லாம் சேர்த்து ‘அவரவர் பாடு’ என்கிற நாவலை எழுதினேன்.
வரலாறு எழுதுவது போல அறிவு பூர்வமான துப்பறியும் நாவல்களில் எல்லா விஷயங்களும் மிக மிகத் தெளிவாக முடியும்போது சொல்லப்பட்டு விட வேண்டும். மர்ம நாவல்களில் அப்படியில்லை; ஒரு மர்மம் துலங்கிய மாதிரியும் இருக்கவேண்டும் & முழுக்கத் துலங்கிவிடாமலும் இருக்க வேண்டும். சமஸ்கிருத இலக்கியத்தில் த்வனி என்று ஒரு சித்தாந்தம் சொல்லுகிறார்களே அது மர்ம நாவலில் அதிகமாக இடம் பெற வாய்ப்பு இருக்கிறது.
தமிழில் மர்ம நாவல்கள் எழுதுகிறவர்கள் மிகவும் குறைவு. எழுதுபவர்களும் பொது ஜன ஆதரவு நாடி ஸெக்ஸ், புரசை வாக்கத்தில் ரைஃபிளினால் சுடுவது, வக்கீல் சாதுர்யம், வாவ் வகையறாக்களை உபயோகித்து மர்மப் போக்கைக் கெடுத்து விடுகிறார்கள். டாஸ் டாவ்ஸ்கியில் பல நாவல்களில் மர்மம் என்பது மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. அதேபோல் சில ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் நாவல்களிலும் இருக்கிறது. பிரெஞ்சு வாசகர்கள் சேஸை நல்ல இலக்கி யாசிரியராகக் கருதுகிறார்கள் என்று கேள்விப்படும்போது ஓரளவு நியாயம் என்றே தோன்றுகிறது.
இன்னும் பல மர்ம நாவல்கள் எழுதிப் பார்க்க ஆசை யுண்டு செய்யவேண்டும்.
இதன் முதற்பதிப்பைக் குயிலன் வெளியிட்டார். இரண்டாவது பதிப்பை ஸ்டார் கண இராமநாதன் வெளி யிடுகிறார். அவர்களுக்கு என் நன்றி உரியதாகிறது.
Author:Ka. Na. Subramaniam
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|