கூகையை தலித்துகளுக்கான குறியீடாக்கி, சமகால தலித் வாழ்க்கையைப் படைப்பாக உருவாக்குவதில் பெரும் வெற்றி கண்டிருக்கிறார் சோ. தர்மன்.
கூகை என்கிற கோட்டான் இடப்பெயர்ச்சியில் ஆர்வமில்லாத பறவை. மிகுந்த வலிமை கொண்டது. எனினும் அந்த வலிமையைத் தன் உணவுக்காக அன்றி வேறு சமயங்களில் பெரிதும் பயன்படுத்துவதில்லை. இருளில் வெளிவந்து உலவும் இயல்புடையது. பகலிலோ அஞ்சி ஒடுங்கித் தன் பொந்துக்குள் கிடக்கும். கூகையின் தோற்றத்தை அருவருப்பாகப் பார்ப்பதும், கோரம் என்று முத்திரை குத்துவதும், கூகையைக் காணுதலையும் அதன் குரல் ஒலி கேட்பதையும் அபசகுனம் என்று கருதுவதும் இந்தச் சமூகத்தில் பாரம்பரியமாகத் தொடர்ந்துவரும் பொதுப்புத்தி.
'தூர்வை, அதிகம் அலட்டிக் கொள்ளாமல் எழும் ஒரு மாற்றுக் குரல், திர்ப்புக் குரல்... தானறிந்த வாழ்க்கையின் ஒரு சித்திரம் இது. வரலாற்றின் ஒரு பரிமாணம். வெகு தீர்மானமான அமைதியான குரல். இக்குரல்தான் ஒரு எழுத்தாளனின் கலை சமூக சக்தியாக, உண்மைக்குச் சாட்சியாக, மனசாட்சியின் குரலாக, இப்படிப் பல பரிமாணங்களில் தன்னை வெளிக்காட்டிக் கொள்கிறது’
- வெங்கட்சாமிநாதன்.
இரண்டு தலைமுறைகளுக்கு முன் உருளக்குடி கிராமத்தில் விவசாய நிலங்களுடன் வீடு - வாசல் என்று வசதியாக வாழ்ந்த தலித் சமூகத்தினரின் வாழ்க்கை, அப்பகுதியில் தீப்பெட்டித் தொழிற்சாலைகள், சாக்குக் கம்பெனிகளின் வருகையினால் பெரும் மாற்றத்துக்குள்ளாவதைச் சித்திரிக்கும் நாவல்.
Author:Cho. Dharman
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|