இத்தொகுப்பில் சில சிறுகதைகள் ஓர் உதய எழுத்தாளன் புனைவு வெளியில் பாரம்பரியமாய் நிகழ்த்திப் பார்க்கும் பரிசோதனைகள். அடுத்த சில புகைமூட்டமான சரித்திரப் பக்கங்களின் இடைவெளிகளை கற்பனையின் தர்க்கத் துகள்களை இட்டு நிரப்புபவை. இன்னும் சில புராண, இதிகாசப் பிரதிகளைக் கலைத்துப் போட்டு தொன்மத்தைக் கீறும் எதிர்கதையாடல் முயற்சிகள். மேலும் சில பெண் மனதின் பிரத்யேக, ரகசிய, வசீகர உள்ளறைகளின் கதவிடுக்கு வெளிச்சத்தைப் பிரதிபலிக்க முனைபவை. பெரும்பான்மைக் கதைகளில் காமத்தின் வினோத அரசியல் மற்றும் அதன் விபரீத விளையாட்டுக்கள் பற்றிய குறிப்புகள் சேகரமாகி இருக்கின்றன. வரலாறும் விஞ்ஞானமும் புராணமும் நவீனமும் உடைந்த தளைகளுடன் முயங்கிக் கிடக்கின்றன இந்தக் கதைகளில்.
SKU-OZCI1KW2XHCVARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|