ஹூக்ளி நதியைப் போலவே அழுக்கும் அழகும் ஒன்று கலந்து நிற்கும் கல்கத்தா நகரம். காதையும் மனத்தையும் திறந்து வை, அப்போதுதான் உள்ளே வருவேன் என்று பிடிவாதம் பிடிக்கும் ஹிந்துஸ்தானி இசை. யுவன் சந்திரசேகரின் இந்த நாவலில் இந்த இரண்டும்தான் பிரதான கதாபாத்திரங்கள். பழகாதவர்களுக்கு கல்கத்தா வீதிகளும் ஹிந்துஸ்தானியும் ஒன்றுதான். இரண்டுமே அலுப்புட்டக்கூடியவை. இரண்டுமே அந்நியமானவை. மேலும், நாம் எதற்கு இன்னொரு நகரத்தையும் அதைவிடச் சிக்கலான இன்னொரு இசை வடிவத்தையும் புரிந்துகொள்ளவேண்டும்? ஆனால் கானல் நதியின் ஒரு சில பக்கங்களைக் கடக்கும்போதே இந்த இரு சிக்கல்களும் விலகத் தொடங்குகின்றன. அலுப்பூட்டும் அனுபவங்களில் இருந்தும் பழக்கப்பட்டுப்போன பாதைகளில் இருந்தும் சட்டென்று விலகி சில புதிய வெளிச்சங்களை நாம் தரிசிக்கத் தொடங்குகிறோம் வெற்றி மட்டுமல்ல, தோல்வியும் முக்கியமானது. எங்கும் கிராமங்களும் நகரங்களும் ஒன்றுபோலவே இருக்கின்றன. அடிப்படையில் மனிதர்களின் இயல்புகள் மாறுவதில்லை. திரை இசை ரசிப்பவர்களால் செவ்வியல் வடிவங்களையும் ரசிக்கமுடியும். இது முரண்பாடல்ல. மனித குலத்தின் ஆதாரப் புள்ளியான நம்பிக்கையை முன்வைத்து மிக அழகாக விரியும் இந்நாவலின் பெயரும்கூட கானல் நதிதான்.
SKU-F2ZJRGZZ2AUAuthor:Yuvan Chandrasekar
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|