நாவலிலிருந்து சில வரிகள்.... இந்தச் சொற்களின் ஆற்றல் அனைத்தும் துக்கமுற்ற அவனது சுயகட்டுப்பாடுகளைத் தகர்த்தெறிந்தது. கதியற்றுப் போனவனாய் அவன் லாதேயின் பாதங்களில் வீழ்ந்தான். அவள் கைகளைப் பற்றினான். கண்களிலும் நெற்றியிலும் வைத்து அழுத்திக்கொண்டான். அதிர்ச்சிகரமான அவனது துயர முடிவைக் குறித்த உள்ளுணர்வு அவளது மனத்தில் பளிச்சிட்டது. அவளது மூளை குழம்பியது. அவனது கைகளை இறுகப் பற்றித் தன் மார்பின் மீது வைத்து அழுத்திக்கொண்டாள். துயரப் பெருமூச்சுடன் அவனைத் தழுவினாள். தகிக்கும் இருவரது கன்னங்களும் உரசின. உலகத்தை மறந்தனர். அவளைக் கைகளால் பின்னித் தன் மார்போடு இறுகத் தழுவி நடுங்கித் துடித்த அவளது இதழ்களில் ஆவேசத்துடன் முத்தமிட்டான். ‘வெர்தர்!’ தவிக்கும் குரலுடன் கத்திய அவள் தன் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். ‘வெர்தர்!’ பலவீனமான கைகளால் அவனைத் தன் மார்பிலிருந்து விலக்கித் தள்ள முயன்றாள். ‘வெர்தர்!’ கௌரவமான அமைதியான குரலில் அழுதாள். அவன் தடுக்கவில்லை. தன் அணைப்பிலிருந்து அவளை விடுவித்தான். வெறிபிடித்தவன் போல் அவள் காலில் விழுந்தான். அவசரமாக விலகிக்கொண்ட அவள், காதலுக்கும் கோபத்துக்குமிடையே தவித்தவளாய், பதற்றத்துடனும் குழப்பத்துடனும் சொன்னாள், ‘இதுதான் கடைசி வெர்தர்! இனி நீ என்னைப் பார்க்கக்கூடாது.’ உவகையையே அறிந்திராத அவன் மீது காதலின் துயரம் கனக்கும் அவள் பார்வை தவித்தது.
SKU-WDJGPQHNZCVAuthor:Kadhae
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|