உயரமான மலைகள், அழகான மலைச்சரிவு, அடர்ந்தக் காடு, அவற்றில் மேகங்களை வம்புக்கு இழுக்கும் மரங்கள் என கண்ணுக்கு விருந்து படைக்கும் காடுகளுக்குக்கிடையில் மேடும் பள்ளமுமான இடங்களில் மரக்கிளைகள், காய்ந்த புல் தட்டைகள் கொண்டு கட்டப்பட்ட வீடுகளும்; வெற்று உடம்போடு, கோவணம் கட்டிய மனிதர்களும்தான் ஒரு காலத்தில் ‘ஆதிவாசி’களின் அடையாளம். இந்த அடையாளங்களை முன்னிலைப்படுத்தி அன்றைக்கும், இன்றைக்கும் ஆதிவாசிகள் என்றாலே நாகரிகமற்றவர்களாகவே பார்க்கப்படுகின்றனர். இந்த அடிமைத்தனத்தை உடைப்பதற்காகவும், காட்டில் தங்களுக்கு இருக்கும் உரிமையை மீட்பதற்காகவும் ஆதிவாசிகள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். இவற்றுக்கு துவக்கப்புள்ளியாக 19-ம் நூற்றாண்டின் இறுதியில், ஆதிவாசிகளின் முதல் போரட்டம் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து ‘பீர்சா முண்டா’ என்ற இளைஞனின் தலைமையில் நடைப்பெற்றது. இந்தப் போராட்டம் பற்றிய பலவிதமான உண்மைத் தரவுகளோடு, எழுத்தாளர் ‘மாகசு வேதாதேவி’. எழுதிய ’ஆரன்ய ஆதிகார்’ என்ற நாவல் சாகித்திய அகடாமி பரிசுப் பெற்றது. இந்த நாவல் முழுவதும் முண்டாக்களின் வாழ்க்கை முறைகள் பற்றியும், போராட்ட நாயகன் பீர்சா முண்டாப் பற்றியும், அவரின் ‘உல்குலான்’ பற்றியும் உணச்சிகள் பொங்க சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
SKU-XFMFUPEAZ44Author:Magasu Veda Devi
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|