கடலுக்கு அப்பால் நாவல், இரண்டாம் உலக யுத்த கால நெருக்கடிகளின் பின்புலத்தில் ஓர் அழகிய காதல் கதையை ஊடு-பாவாகக் கொண்டது. செட்டிதெரு ஆ.சி. வயி. வயிரமுத்துப்பிள்ளை லேவா-தேவிக் கடை அடுத்தாளான செல்லையா, முதலாளியின் சொல்லை மீறி இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்தவன். நேதாஜியின் திடீர் மரணத்தை அடுத்து, இந்திய தேசிய ராணுவத்திலிருந்து வெளியேறி, பழைய வானாயீனா பெட்டியடிக்குத் திரும்புகிறான். பெட்டியடிக்குத் திரும்பிவரும் செல்லையாவை வானாயீனாவின் தொழில் மனம் ஏற்க மறுக்கிறது. செல்லையாவின் நடை உடை அவருக்கு ஒப்பவில்லை. 'இந்தத் தொழிலுக்கு அடக்கமில்ல வேணும்' என்றும் அவர் மனம் பலமுறை அடித்துக்கொள்கிறது. கடைசியில் அவனிடமே, ‘இது பொட்டச்சி தொழிலு. ஒனக்கு இது ஒத்து வராது’ என்று கூறிவிடுகிறார். இதனையடுத்து, தனது கடையில் அடுத்தாளாக இருக்கும் வேறொருவனுக்குத் தன் மகள் மரகதத்தை மணமுடிக்க முடிவெடுக்கிறார். இறுதிப்பகுதியில் காதலர்கள் படும் வேதனைகளும் கலக்கமும் கண்ணீரும் பிரிவும் ஆற்றாமையும் யுத்த காலப் பின்னணியிலான ஓர் அழகிய காதல் கதையாக இந்நாவலை உருவாக்கியிருக்கின்றன. - சி. மோகன்
SKU-QEZHMEZ3RJWAuthor:Pa. Sinkaaram
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|