முகிலினி நாவல். கோவை மாவட்டத்திற்கும் அதைச் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கும் வாழ்வாதாரமாக விளங்கியது பவானி ஆறு. அந்த ஆறு மீட்கப்பட்டதற்கான வரலாறைப் பேசுகிறது நாவல்.
இந்த நாவலைப் படிக்கும் நண்பர்களுக்கு இது முற்றிலும் புனைவு, எதுவுமே புனைவு அல்ல என்று இரண்டு முரண்பட்ட சித்திரங்கள் கிடைக்கக் கூடும். எனவே உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட புனைவு என்று வைத்துக்கொள்ளலாம். காலத்தையும் சம்பவங்களையும் வசதிக்காக கொஞ்சம் முன்பின்னாக மாற்றியிருக்கிறேன்.
அருணனின் அண்ணா ஆட்சியைப் பிடித்தது எப்படி, டி.எம்.பார்த்தசாரதியின் திமுக வரலாறு, கண்ணாக்குட்டியின் போராட்டம் என் வாழ்க்கை, பஞ்சாலைத் தொழில் நேற்று இன்று நாளை, என். சின்னசாமி எழுதிய A Life of fulfillment, SIMA Ajourney through 75 years, அய்யாமுத்து எழுதிய என் நினைவுகள், Small is beautiful, கல்கியின் கண்கொள்ளாக் காட்சிகள் போன்ற நூல்கள் இந்நாவலை எழுத உதவியாக இருந்தன.
தொடக்கம்
1953
ஒரு மிகப்பெரிய வேப்ப மரம் சரஸ்வதி மில் அலுவலகத்தின் விசாலமான முற்றம் முழுவதையும் வெயில் விழாமல் மறைத்த வண்ணம் கிளைகளைப்பரப்பி நின்றுக்கொண்டிருந்தது. அதன் மேல் பெரும்பெரும் இலைகள் கொண்ட மணிப்பிளாண்ட் கொடி படர்ந்திருந்தது. மரத்தைச்சுற்றி அமைக்கப்பட்டிருந்த மேடையில் நெருக்கமாக குரோட்டன் செடிகள் வளர்க்கப்பட்டிருந்த தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இரவு பெய்த மழையால் மணிப்பிளாண்ட், குரோட்டன் இலைகளில் இருந்து இன்னும் தண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தது.
முகிலினி நாவல், கோவை மாவட்டத்தின் வாழ்க்கைச் சூழலைப் பேசுகிறது. ஒரு பஞ்சாலை எப்படி உருவாகிறது? ஏன் உருவாக வேண்டும்? கோவை எப்படி தென்னிந்தியாவின் மான்செஸ்டர் ஆனது? உள்ளூர் முதலாளிகளுக்கும் அரசுக்குமான புரிதல், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அரசுக்குமான ஒப்பந்தங்கள், இடதுசாரி இயக்கங்களின் துவக்கம், தொழிலாளர்கள் போராட்டம், இயக்கங்களுக்கு இடையேயான கருத்து முரண்கள்,முதலாளி, தொழிலாளி, ஏழை பணக்காரன் என்கிற வர்க்கப் பின்புலத்தில் அடித்தட்டு மக்களின், ஒடுக்கப்பட்ட மக்களின் இழப்புகள், மாசுக்கட்டுப்பாடு, நதிநீர் பிரச்சனைகள், மக்கள் எழுச்சி, விஸ்கோஸ் போராட்டத்தின் வெற்றி, சிறு வணிகத்தை இல்லாமலே செய்த வால்மார்ட் தந்திரம். மறு காலனியாதிக்கத்தின் சந்தையில் சிக்கித் தவிக்கும் இயற்கை வேளாண்மை, பெண் அரசியலின் போதாமைகள், பெரும் முதலாளிகளுக்கும் அரசுக்கும் இடையே குழப்பத்தில் நிற்கும் இன்றைய மக்களின் உளவியல் சிக்கல்களை, சமகால அரசியலை கதாபாத்திரங்கள் ஊடாக ஆவணப்படுத்தியிருக்கிறது முகிலினி நாவல்
இந்தி எதிர்ப்பு, காங்கிரஸ் கட்சி நிலைகள், காமராஜர், அண்ணா, கலைஞர் கருணாநிதி மற்றும் திராவிடக் கட்சிகளின் செயல்பாடுகள், வினோபாபாவே, ஜெ.பி. - காந்தியப் பிளவுகள், இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட் இவர்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள் இவைகளையும் நாவல் பேசியிருக்கிறது.
Author:R.Murugavel
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|