நவீன வாழ்வின் அடிப்படைச் சிக்கல்கள் குழந்தையின்மை என்னும் ஓர் ஊடகத்திலிருந்து ஆட்டிஸம் பாதித்த குழந்தையைப் பேணி வளர்த்தல் எனும் அடர்த்தி கூடிய ஊடகத்தில் நுழையும் போது, அவை பல வண்ணக் கற்றைகளாகச் சிதறி மரபு, ஆன்மிகம், தொன்மம், நாட்டாரியல், யதார்த்தத் தளத்தின் உறவுச் சிடுக்குகள், மீயதார்த்தத் தளத்தில் உருவாக்கிக் காட்டப்படும் அற்புத உலகங்கள் எனப் பல தளங்களைத் தொட்டுத்தொட்டு பொருள்கொள்ள முயல்கிறது. பல தளங்களைத் தொடுவதால் இயல்பாகவே \u0003பல குரல்களையும், கூறு முறைகளையும், பின்புலக் காலகட்டங்களையும் கொண்டதாக அமைந்திருக்கிறது, ‘நீலகண்டம்’. அந்தப் பலகுரல்பட்ட தன்மை, ஒன்றையொன்றை நிரப்புவதாகவும், ஒட்டுமொத்தமாக இந்நாவல் எடுத்துக் கொண்ட களத்திற்குப் பொருள் கூட்டுவதாகவும் அமைந்திருப்பது சிறப்பு. அறியுந்தோறும் அறியமுடியாமை நோக்கி நகர்ந்து, அறிய முயல்பவனின் கண்டத்தில் எஞ்சும் நீலம். அதையே இன்னும் ஒரு தளத்தில் இன்னும் ஒரு கோணத்தில் நீலகண்டம் என்னும் \u0003நாவலாக்கியிருக்கிறார் சுனில் கிருஷ்ணன்.
Author:Sunil Kirushnan
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|