லியோ டால்ஸ்டாயின் முக்கியமான நாவல்கள் போரும் வாழ்வும். போரும் வாழ்வும் ரஷ்யாவின் ''இலியட், ஒடிசி'' என்றுபோற்றப்படுகிறது. இந்த மாபெறும் நாவல் வரலாற்று மனிதர்களை நம்முடன் உறவாட வைக்கின்றது. போரும் வாழ்வும் படிக்கத் தொடங்கியபோது பின்னாட்களில் வெளிவந்த பெரு நாவல் முயற்சிகளுக்கு அது முன்னோடி என்றோ நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டது என்றோ எனக்குள் எதுவித எண்ணமும் உருவாகி இருக்கவில்லை. ஆங்கிலப் பிரதியில் சில அத்தியாயங்கள் படித்த பின்பு தமிழில் அந்நூலினை வாசிக்க வேண்டுமென்ற ஆவல் எழுந்தது. டி.எஸ்.சொக்கலிங்கம் அவர்களின் மொழிபெயர்ப்பு சில அத்தியாயங்களிலேயே வாசித்துக் கொண்டிருப்பது ஒரு மொழிபெயர்ப்பு நாவல் என்பதை மறக்கடித்துவிட்டது. பிரெஞ்சு கலாச்சாரம் வலுவாக ஊடுருவிய ரஷ்ய உயர்குடியை பகடி செய்தவாறே நெப்போலியனுக்கு எதிராக ரஷ்யா நடத்தப் போகும் போருக்கான ஆயத்தங்களுடனும் போரில் கலந்து கொள்ளக் கூடிய உயர் வகுப்பு இளைஞர்களுடனும் அவர்களின் குடும்பங்களுடனும் தொடங்குகிறது. பீயரும் பால்கோன்ஸ்கிகளும் ராஸ்டோவ்களும் குராகின்களும் டோலாகாவும் விருந்துகளின் வழியாகவும் உரையாடல்கள் வழியாகவும் அறிமுகமாகின்றனர். அவர்கள் குறித்த ஒரு சித்திரம் உருவான பின்பு போர் நோக்கி நகர்கிறது. இரண்டு படைப்பிரிவுகளாக பிரிந்து நின்று சண்டையிடும் வகைப் போர்களையே உருவகப் படுத்தியிருந்த மனதிற்கு டால்ஸ்டாய் அறிமுகம் செய்யும் போர்க்களம் அதிர்ச்சி தரவே செய்கிறது. தளபதியின் கட்டுப்பாட்டில் அனைத்தும் இருப்பதாக நம்பும் ஆண்ட்ரூ யுத்தம் செல்லும் போக்கிற்கு ஏற்றவாறு பாக்ரேஷன் அளிக்கும் உத்தரவுகளை கண்டு ஆச்சரியம் கொள்வதும் இளமைத் துடிப்பில் முன்னேறி காயம்படும் நிக்கலஸ் ஒற்றை பீரங்கிப் படையுடன் எதிர்த்து நிற்கும் டூஷின் வீரத்துடன் சண்டையிட்டு போரின் அன்றைய நாள் முடியும் போது தாங்கள் கைப்பற்றிய பதக்கங்களுடனும் உடுப்புகளுடனும் பதவி உயர்வுக்காக கெஞ்சும் வீரர்கள் என போர் குறித்த ஒவ்வொரு பிம்பத்தையும் சிதறடிக்கிறது முதற் போர்களம்.
SKU-PT1YWAL982LAuthor:Leo Tolstoy
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|