பெண்ணியம் என்ற சொல்லோ கருத்தாக்கமோ தமிழ்ச் சூழலில் பேசப்படாதிருந்த காலப்பகுதியில் பெண்மைய நோக்கில் எழுதப்பட்ட நாவல் கிருத்திகாவின் ‘புகைநடுவில்’. வழக்கமான நாவல்களில் வருகின் றாற்போல், சம்பவம் எதில் முடிந்தது என்றோ, கதாபாத்திரத்தின் முடிவு என்னவாயிற்று என்றோ இந்த நாவலை ஒட்டி யோசிக்க முடியாது. சம்பவங்களின் தொகுப்பாக இருக்கிறது என்பதைவிடத், தர்க்கரீதியான பல கருத்துக்களை விவாதிக்கவே சம்பவங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. செறிவான எழுத்து, தத்துவ விசாரம் இருக்கிறது. ஆனால் தத்துவ சிக்கல்கள் இல்லை. எல்லாப் பாத்திரங்களின் எண்ணங்களும் உணர்வுகளும் மனித மனங்களின் கூறுகளாகவே அணுகப்பட்டிருக்கின்றன. எந்தக் கதாபாத்திரமும் சரி தவறு என்ற முறையில் அணுகப்படவில்லை. இந்த நடுநிலையான அணுகுமுறையே கிருத்திகாவின் முதன்மையான ஆகிருதி.
SKU-PRLBEM7GPQ_Author:Kiruthika
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|