16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar 605005 Pondicherry IN
RMEMART
16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar Pondicherry, IN
+917373732817 https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/62c6535913104e3755d3edbc/rm-emart-logo-final-230px-2-480x480.png" [email protected]
631c309fea79cdd52f68d977 Puyalile Oru Thoni (P. Singaram) https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/658e4b6ed24c8fb5e5cf495c/puyaliley-oru-thoni-1320052h.jpg

புயலிலே ஒரு தோணி' நாவலின் நாயகன் பாண்டியன் பற்றிய ப.சிங்காரத்தின் புனைவு, கெட்டிதட்டிப்போன தமிழர் வாழ்க்கையின்மீது வீசப்பட்ட பெரிய பாறாங்கல். பொதுப்புத்தி, மதிப்பீடுகளைச் சிதைக்கின்ற பாண்டியன் அடிப்படையில் சாகசக்காரன், புரட்சிக்காரன், கலகக்காரன். பூகோளத்தின் மீதான பிரமாண்டமான அனுபவங்கள் குறித்து உற்சாகத்துடன் கிளர்ந்தெழும் பாண்டியனுக்கு எதுவும் பொருட்டல்ல. சாகசச் செயலில் ஆர்வம், தொடர்ந்து மது அருந்துதல், நிறைய பெண்களுடன் தொடர்பு, மரணம் குறித்து அக்கறையின்மை, இடம் பெயர்தல், பரபரப்பான மனநிலை ஆகியன பாண்டியனின் இயல்பாக உள்ளன. தமிழில் இதுவரை எந்த நாவலாசிரியரும் தொட்டிராத சிகரத்தினைத் தனக்கான புதிய மொழியின் வழியே ப.சிங்காரம் அடைந்துள்ள சாதனை, தனித்துவமானது. புயலிலே ஒரு தோணி நாவல், தலைப்பினுக்கேற்ப கதையாடலில் அங்குமிங்கும் இடைவிடாமல் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது. சிம்பனி இசைக்கோர்வை போல நாவலின் கதைப்போக்கினில் பல்வேறு கதைக்கருக்கள், தோன்றி, வளர்ந்து மறைந்து, மீண்டும் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. அவை வாசகனை வெவ்வேறு தளங்களுக்கு முடிவற்று இழுத்துச் செல்கின்றன. - ந.முருகேசபாண்டியன் தமிழ் நாவல் கலையின் பெருமிதம், ப.சிங்காரம். நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் ஓர் அபூர்வ ஆளுமை. தன்னுடைய படைப்புகளோடும் வாழ்வோடும் இவர் கொண்டிருந்த உறவு தனித்துவமானது, அலாதியானது. இரண்டே இரண்டு நாவல்கள் மட்டுமே எழுதியிருக்கிறார். இரண்டு நாவல்களுமே தமிழ் நாவல் பரப்பின் எல்லைகளை விஸ்தரித்திருப்பவை. ப.சிங்காரத்தின் படைப்பு மொழி, நவீன உரைநடைகளில் மிகவும் விசேஷமானது. கதை மாந்தர்களின் மனமொழி தமிழில் இவரளவுக்கு எவரிடமும் இவ்வளவு அநாயசமாகக் கூடி வரவில்லை. மனக்குகை வாசல்கள் தாமாகவே திறந்து கொண்டு விட்டிருக்கின்றன. உணர்வுகளின் ரகசிய முகமூடிகள் கழன்று விழுந்து, உள்ளுக்குள் நடப்பதை அப்பட்டமாகக் காட்டுகின்றன. கடலுக்கு அப்பால் நாவலில், புயலிலே ஒரு தோணியில் கடவுளின் மலர்ந்த சிரிப்பும் உள்ளுறைந்திருக்கின்றன. கடலுக்கு அப்பால் பெறுமதியான ஒரு நாவல். அதிலிருந்து சகல பரிமாணங்களிலும் விரிந்து பரந்து விகாசம் பெற்றிருக்கும் மகத்தான படைப்பு, புயலிலே ஒரு தோணி. நம் மொழியின் நவீன பொக்கிஷம். சி.மோகன்

SKU-X1U7XJ4FZIR
in stockINR 285
1 1
Puyalile Oru Thoni (P. Singaram)

Puyalile Oru Thoni (P. Singaram)

Author:P. Singaram

Sku: SKU-X1U7XJ4FZIR
₹285
₹300   (5%OFF)

Sold By: RMEMART
VARIANTSELLERPRICEQUANTITY

Description of product

புயலிலே ஒரு தோணி' நாவலின் நாயகன் பாண்டியன் பற்றிய ப.சிங்காரத்தின் புனைவு, கெட்டிதட்டிப்போன தமிழர் வாழ்க்கையின்மீது வீசப்பட்ட பெரிய பாறாங்கல். பொதுப்புத்தி, மதிப்பீடுகளைச் சிதைக்கின்ற பாண்டியன் அடிப்படையில் சாகசக்காரன், புரட்சிக்காரன், கலகக்காரன். பூகோளத்தின் மீதான பிரமாண்டமான அனுபவங்கள் குறித்து உற்சாகத்துடன் கிளர்ந்தெழும் பாண்டியனுக்கு எதுவும் பொருட்டல்ல. சாகசச் செயலில் ஆர்வம், தொடர்ந்து மது அருந்துதல், நிறைய பெண்களுடன் தொடர்பு, மரணம் குறித்து அக்கறையின்மை, இடம் பெயர்தல், பரபரப்பான மனநிலை ஆகியன பாண்டியனின் இயல்பாக உள்ளன. தமிழில் இதுவரை எந்த நாவலாசிரியரும் தொட்டிராத சிகரத்தினைத் தனக்கான புதிய மொழியின் வழியே ப.சிங்காரம் அடைந்துள்ள சாதனை, தனித்துவமானது. புயலிலே ஒரு தோணி நாவல், தலைப்பினுக்கேற்ப கதையாடலில் அங்குமிங்கும் இடைவிடாமல் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது. சிம்பனி இசைக்கோர்வை போல நாவலின் கதைப்போக்கினில் பல்வேறு கதைக்கருக்கள், தோன்றி, வளர்ந்து மறைந்து, மீண்டும் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. அவை வாசகனை வெவ்வேறு தளங்களுக்கு முடிவற்று இழுத்துச் செல்கின்றன. - ந.முருகேசபாண்டியன் தமிழ் நாவல் கலையின் பெருமிதம், ப.சிங்காரம். நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் ஓர் அபூர்வ ஆளுமை. தன்னுடைய படைப்புகளோடும் வாழ்வோடும் இவர் கொண்டிருந்த உறவு தனித்துவமானது, அலாதியானது. இரண்டே இரண்டு நாவல்கள் மட்டுமே எழுதியிருக்கிறார். இரண்டு நாவல்களுமே தமிழ் நாவல் பரப்பின் எல்லைகளை விஸ்தரித்திருப்பவை. ப.சிங்காரத்தின் படைப்பு மொழி, நவீன உரைநடைகளில் மிகவும் விசேஷமானது. கதை மாந்தர்களின் மனமொழி தமிழில் இவரளவுக்கு எவரிடமும் இவ்வளவு அநாயசமாகக் கூடி வரவில்லை. மனக்குகை வாசல்கள் தாமாகவே திறந்து கொண்டு விட்டிருக்கின்றன. உணர்வுகளின் ரகசிய முகமூடிகள் கழன்று விழுந்து, உள்ளுக்குள் நடப்பதை அப்பட்டமாகக் காட்டுகின்றன. கடலுக்கு அப்பால் நாவலில், புயலிலே ஒரு தோணியில் கடவுளின் மலர்ந்த சிரிப்பும் உள்ளுறைந்திருக்கின்றன. கடலுக்கு அப்பால் பெறுமதியான ஒரு நாவல். அதிலிருந்து சகல பரிமாணங்களிலும் விரிந்து பரந்து விகாசம் பெற்றிருக்கும் மகத்தான படைப்பு, புயலிலே ஒரு தோணி. நம் மொழியின் நவீன பொக்கிஷம். சி.மோகன்

User reviews

  0/5