பொதுவுடைமைவாதி; சாதி ஒழிப்பைப் பேசுபவர்; தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்துபவர்; பெண் விடுதலையை முன்மொழிபவர்; இவ்வளவுதானா இராசேந்திரசோழன்? வாழ்க்கை எந்த அளவு போராட்டம் நிரம்பியதோ அந்த அளவு அழகும் நிரம்பியது; புதிர்கள் நிறைந்தது. மனித மனமோ புரிந்துகொள்ளப்பட முடியாத ரகசியங்களால் நிரம்பி வழிவது. இராசோ பெருங்கலைஞர். தமிழில் வாழ்க்கையின் விசித்திரங்களை வியந்து வியந்து எழுதிய புதுமைப்பித்தனையும், மிக மிக நுட்பமான உணர்வுகளைச் சின்னச்சின்ன வருணனைகளில் அபாரமாக எழுதிய தி.ஜானகிராமனையும் வியந்தவர். சமூகச் சிக்கல்களைத் தன் கட்டுரைகளில் பேசியவர். எந்த ஓர் எழுத்தாளனையும் முத்திரை குத்தியே பழக்கப்பட்டுப்போன சமூகம், இராசோ என்கிற அரசியல் போராளியை அடையாளப்படுத்திய தோழர்கள், இராசோ என்கிற கலைஞனை உணர்ந்துகொண்டதாகவே தெரியவில்லை. இத்தொகுப்பு உருவாக்கப்பட்டதின் நோக்கம் இராசோ என்ற பெருங்கலைஞனை உணர்ந்துகொள்ள வைப்பதே
SKU-CSXGLSZFQZ8VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|