போலியானதொரு சித்தரிப்போ,மிகையுணர்ச்சியினூடான எழுத்தோ அல்லாமல் கொங்கு கிராமிய வாழ்வின் யதார்த்தத்தை எளிமையான நடையில் சொல்லிச் செல்பவை வா.மு.கோமுவின் படைப்புகள். பாலியல் அல்லாதொரு கொங்குக் கிராமிய வாழ்க்கை இவரது எழுத்துகளில் சாத்தியப்படாதா ? என்கிற நீண்ட கால விமர்சனத்துக்கு இவர் கொடுத்திருக்கும் பதிலடிதான் தானாவதி. திருமணம் என்பது உடலியல் சார்ந்த பகிர்தலுக்கான, வடிகால் மட்டுமல்ல. தனது இருப்புக்கான அர்த்தத்தை உலகுக்குப் பறைசாற்றுவதன் நிகழ்வே திருமணம் என்பதையும், மனமுடிக்காத முதிர்கண்ணன்களின் சோகம் படிந்த வாழ்க்கையையும் சொன்ன விதத்தில் தானாவதி கவனிப்புக்குரியதாகிறது. சமகாலக் கொங்கு இளைஞர்களின் திருமணச் சிக்கலைப் பேசிய விதத்தில் கொங்குப் படைப்பாளர்களில் தனக்கான இடத்தை மீண்டும் அழுத்தமாக நிறுவுகிறார் வா.மு.கோமு. - கி.ச.திலீபன்.
SKU-YRPMQGXG94NAuthor:Vaa.Mu.Ko.Mu.
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|