ஸ்கிஸாய்ட் பர்ஸனாலிட்டி எனப்படும் மனப் பிளவு கொண்ட இளங்கோ, விளம்பரப் பலகைகள், பேனர்கள் எழுதும் தொழிற்துறை ஓவியன். 2000 வருட வாக்கில் ப்ளக்ஸ் பேனர்கள், போர்டுகள் வரவால் தொழில் இழக்கிறான். இந்தப் பின்புலத்தில், இளம் பருவம் முதலான அவனது காதலின் இனிமைகள், பிறகு நேரும் காதல் தோல்வி, அதன் விளைவுகள், தொழில் மற்றும் வாழ்வியல் மாற்றம் ஆகியவற்றைச் சித்தரிப்பதே இந்த நாவல். பிஞ்ச் செயலியில் வெளியான இது, அற்புதமான கதை, நெகிழ வைக்கக் கூடியது, நல்ல வாழ்க்கைப் பதிவு, எதார்த்தமான கதை, மிக நுணுக்கமான உணர்வுகள் வார்த்தைகளில் மிக அழகாக விவரிக்கப்பட்டுள்ளன, காதலைக் கடந்து வாழ்க்கையின் எதார்த்தத்தைப் புரிய வைத்தது, பாத்திரங்கள் சிறப்பு, ஏராளமான செய்திகளும் தகவல்களும் கொண்டது, என்பது உள்ளிட்ட பாராட்டுகளைப் பெற்றது.