எத்தேசத்தில் பண்பாடு செழித்து ஓங்குகிறதோ! அத்தேசத்தில் வீரத்திற்கும் காதலுக்கும் பஞ்சமே இருப்பதில்லை...! நம் பழம்பெரும் தமிழ்நாட்டின் வரலாற்றை தேடி படித்திடும் எவருக்கும் ஆதித்திய கரிகாலனை பற்றிய விளக்கவுரை அவசியமன்று...! ஆனால், விளக்கவுரை எழுதிடுவது இப்புத்தகத்தின் எழுத்தாளனாய் எனது கடமையாயிற்றே! நமது கதையில் வலம்வந்திடும் கதையின் நாயகன், இரண்டாம் ஆதித்திய கரிகாலன் ஆவான். இவன் சோழ அரசர் சுந்திர சோழனின் மகன். பிற்கால சோழ நாட்டை, சோழபேரரசாக மாற்றியதில் ஆதித்தியனின் பங்கு மிகவும் உத்தமமானது. அன்றைய தென்னிந்தியாவின் மாபெரும் அரசுகளான, பல்லவ ராஜ்யத்தையும், பாண்டிய நாட்டையும் வென்று சோழ நாட்டை; சோழ பேரரசாக மாற்றியது ஆதித்தியன் என்பதில் ஐயமில்லை. அத்தகைய மாவீரனின் காதல் கதைதான் இப்புத்தகம்.